மிழக கவர்னர் ரவியை வெளுத்து எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது காட்டமான பதிலடி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்த டெல்லிக்கும் உறைத்திருக்கிறது. 

Advertisment

சென்னை கவர்னர் மாளிகையில், வள்ளலா ரின் 202-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய கவர்னர் ரவி, "வள்ளலாரின்  தத்துவங்கள் எனக்கு மகிழ்ச்சி யைக் கொடுத்தன. ஆனால், இன்றைக்கு  ஒவ்வொரு நாளும், பத்திரிகைகள் வாயிலாக தீண்டாமை எனும் பெயரில் கொலை, அடிதடி சம்பவங்களை காணுகிறேன். பட்டியலினத்தவர்கள்  ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். தமிழகம் முழுதும் நான் பயணம் மேற்கொள்ளும்போது, அங்குள்ள சுவர்களைப் பார்ப்பேன். அதில், "தமிழகம் போராடும்' என்று எழுதப்பட்டிருக்கும்; யாருடன் போராடும்? தமிழகத்தை எதிர்த்து யாரும் போராடாதபோது, யாருடன் போராடுவார்கள்?'' என்று தி.மு.க. அரசையும், முதல்வர் ஸ்டாலினை யும் சீண்டும் வகையில் அரசியல் பேசியிருக்கிறார். கவர்னரின் இந்த பேச்சு தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisment

இந்த நிலையில், கவர்னரின் கேள்விக்கு பதிலடி தந்துள்ள முதல்வர் ஸ்டாலின், "தமிழகம் யாருடன் போராடும் எனக் கேட்டிருக்கிறார் கவர்னர் ரவி. ஹிந்தி மொழியை ஏற்றுக்கொண் டால்தான் கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக் கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும். அறி வியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங் களுக்குள்  மூடநம்பிக்கை களையும், புரட்டுக் கதை களையும் சொல்லி, இளம் தலைமுறையை நூற்றாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும். உச்சி மண்டைவரை மதவெறியை ஏற்றிக்கொண்டு  நாட்டின் வளர்ச்சி யைத் தடுக்கும் தந்திர கும்பல்கள் தலையெடுக்கா மல் இருக்க போராடும். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும். கவர்னரின் அதிகார அத்துமீறல் களுக்கு எதிராக, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத் துக்குச் சென்று, மாநில உரிமைகளை நிலை நாட்டுகிறோம். 

அரசியல் சட்டத்தின் மாண்பை சிறுமைப் படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும். தமிழகத்துக்கு வரவேண் டிய தொழிற்சாலைகளை, தொழில் வளர்ச்சியை, வேலை வாய்ப்புகளை மிரட்டி அடுத்த மாநிலத் துக்கு அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்.  ஆர்.எஸ்.எஸ்.  ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, மனுதர்மத்தை மீண்டும்  நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும். 

Advertisment

லோக்சபா தொகுதிகள் மறுவரையறை வாயிலாக, தமிழகத்தின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும். ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும், "நீட்' எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும். 

நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழகம் மட்டும் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும். தமிழக மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் கவர்னருக்கு எதிராகவும் போராடும்... இறுதியில் தமிழகம் வெல்லும்'' என்று மிகக்காட்டமாக வெளுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

-இளையர்